கோவி.மணிசேகரன் (1927)

கோவி.மணிசேகரன்

 

(1927 - 2021)

அறிமுகம்

கோவி. மணிசேகரன் (Kovi. Manisekaran, மே 21, 1927-நவம்பர் 18, 2021) ஒரு தமிழ் எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குனர் ஆவார். 1992 இல் இவர் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றார்.

 

வாழ்க்கைக் குறிப்பு

 

கோவி.மணிசேகரன் பிரித்தானிய இந்தியாவின், வட ஆற்காடு மாவட்டம் (தறுபோதைய வேலூர் மாவட்டம்) சல்லிவன்பேட்டையில் 1927ஆம் ஆண்டு மே 2ஆம் நாள் பிறந்தார். மணிசேகரன் 50 ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்துலகில் உள்ளார். இவர் 8 நாடகங்கள், 29 சிறுகதைத் தொகுப்புகள், 30 சமூகப் புதினங்கள், 50 வரலாற்றுப் புதினங்கள், 8 கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இவரது வரலாற்றுப் புதினங்கள் இவருக்குப் பெயர் பெற்றுத் தந்தன. 1992ல் இவரது வரலாற்றுப் புதினமான குற்றாலக் குறவஞ்சி தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது. இவர் இரண்டு தமிழ் மற்றும் ஒரு கன்னட திரைப்படங்களை இயக்கியுள்ளார். புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் கே. பாலசந்தரிடம் 21 ஆண்டுகளாக உதவி இயக்குனராக பணிபுரிந்தார். இவரது திரைப்படம் தென்னங்கீற்று தமிழக ரசிகர்மன்ற விருதும் கர்நாடக அரசின் நீரிக்‌ஷே விருதும் பெற்றது.

 

விருதுகள்

 

சாகித்திய அகாதமி விருது - 1992

தினத்தந்தியின் சி. பா. ஆதித்தனார் விருது [5]

 

எழுதிய நூல்கள்

 

தாஜ்மகால்

நித்திரை மேகங்கள்

திரிசூலி

காளையார் கோவில் ரதம்

காற்று வெளியிடைக் கண்ணம்மா

வரலாற்றுப்புதினங்கள்

அக்னி வீணை

அக்னிக்கோபம்

அரண்மனை ராகங்கள்

அழகு நிலா

அஜாத சத்ரு

ஆதித்த கரிகாலன் கொலை

இந்திர விஹாரை

இளவரசி மோகனாங்கி

எரிமலை

கங்கை நாச்சியார்

கங்கையம்மன் திருவிழா

கவிஞனின் காதலி

கழுவேரி மேடு

காஞ்சிக்கதிரவன்

காந்தர்வதத்தை

காந்தாரி

காவிய ஓவியம்

காளையார் கோவில் ரதம்

கானல் கானம்

குடவாயில் கோட்டம்

குமரி/பேய்மகள் இளவெயினி/ஹைதரலி

குறவன் குழலி

குற்றாலக் குறிஞ்சி

கொடுத்து சிவந்த கைகள்

கொல்லிப்பாவை

சந்திரோதயம்

சமுத்திர முழக்கம்

சாம்ராட் அசோகன் (அசோக சக்ரம்)

சித்ராங்கி

சுதந்திர தீவில் வெள்ளை நாரைகள் (மறவர் குல மாணிக்கம்/ராணி வேலுநாச்சியார்)

செஞ்சி அபரஞ்சி

செஞ்சிச் செல்வன்

செம்பியன் செல்வி

சேர சூரியன்

சேரன் குலக்கொடி

சோழ தீபம்

தட்சண பயங்கரன்

தலைவன் தலைவி

தியாகத் தேர்

திருமேனித் திருநாள்

தூது நீ சொல்லி வாராய்

தென்னவன் பிராட்டி

தேரோடும் வீதியிலே

தேவ தேவி

தோகை மயில்

நந்தி வர்மன் (ராஜ மாதா/நந்தமிழ் நந்தி)

நாக நந்தினி

நாயக்க மாதேவிகள்

நாயகன் நாயகி

நிலாக்கனவு

பத்தாயிரம் பொன் பரிசு

பூங்குழலி

பூந்தூது

பெண்மணீயம்/மேகலை/இந்திரவிஹரை

பொற்கால பூம்பாவை

பொற்கிழி

பொன் வேய்ந்த பெருமாள்

மகுடங்கள்

மணிமண்டபம்

மதுரை மன்னர்கள்

மயிலிறகு

மலைய மாருதம்

மனித மனிதன்

மனோரஞ்சிதம்

மாண்புமிகு முதலமைச்சர்

மாவீரன் காதலி

மிதக்கும் திமிங்கினங்கள்

முகிலில் முளைத்த முகம்

முடிசூட்டு விழா

முதல் உரிமைப் புரட்சி

மேவார் ராணா

ரத்த ஞாயிறு

ராஜ கர்ஜனை

ராஜ சிம்ம பல்லவன்

ராஜ தரங்கனி

ராஜ நந்தி

ராஜ மோகினி

ராஜ ராகம்

ராஜ வேசி

ராஜசிம்மன் காதலி

ராஜாளிப் பறவை

ரூப்மதி/கானல் காணம்

வரலாற்றுப் புதினங்களின் தொகுப்பு

வராக நதிக்கரையில்

வாதாபி வல்லபி

வீணா தேவி

வெற்றி திருமகன்

வேங்கை வனம்

இயக்கிய திரைப்படங்கள்

தென்னங்கீற்று (திரைப்படம்) (தமிழ் மற்றும் கன்னடம்)

யாகசாலை (தமிழ்)

 

மறைவு


வயது மூப்பின் காரணமாக, நவம்பர் 18, 2021 அன்று தனது 96 வயதில் காலமானார்.